← வலைப்பதிவுக்குத் திரும்புகும்பாபிஷேகம்

மகா கும்பாபிஷேகம் மற்றும் யாகசாலை — நான்கு தலைமுறைகளின் புனித பணி

எழுதியவர் G. Panchanathan6 min read
மகா கும்பாபிஷேகம் மற்றும் யாகசாலை — நான்கு தலைமுறைகளின் புனித பணி

மகா கும்பாபிஷேகம் மற்றும் யாகசாலையின் முக்கியத்துவம்

12 வருடங்களுக்கு ஒரு முறை கோயில்களில் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவில் முக்கிய இடம் பிடிப்பது யாகசாலை தான்.

யாகசாலை அமைப்பு முறை

யாகசாலை அமைப்பதற்கு ஆகம விதிப்படி சிவாச்சாரியார்களின் வழிகாட்டுதலுடன், மூலவருக்கு வடகிழக்கு மூலையில் (ஈசாணி) இடம் தேர்வு செய்யப்பட்டு சுடாத பச்சை செங்கற்களை கொண்டு பச்சை மண்ணால் பிசைந்து கும்பாபிஷேகம் முடிந்த மழையில் கரையுமாறு கட்டப்படுகிறது.

மேலும் யாகசாலையை வர்ணங்கள் மற்றும் கலர் பேப்பர்களால் அழகு படுத்தப்பட்டு அதில் யாக குண்டங்கள் வளர்த்து இறைவனுக்கு பூஜை செய்கின்றனர்.

இதில் முப்பது முக்கோடி தேவர்களும் கலந்து கொண்டு இறைவனம் பலம் பெற வேண்டி கொள்வதாக ஐதீகம் கூறுகின்றது.

நான்கு தலைமுறைகளின் பணி

இது குறித்து அவரிடம் கேட்ட போது:

"எனக்கு முன் தாத்தா காளிமுத்து, தந்தை குருசாமி ஆகியோர் செய்து வந்தனர். தற்போது நான் இந்த பணிகளை செய்கிறேன்."

எங்கள் குடும்பத்தினர் தமிழகம் முழுவதும் உள்ள பாரம்பரிய கோயில்களில், மேலும் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் — ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களில் யாகசாலைகள் அமைத்து கொடுத்துள்ளோம்.

இறைபணியாகும் யாகசாலை கட்டுமானம்

இந்த பணி இறைவனுக்கு செய்கின்ற பணி என்பதால் மனதிற்கும், உடலுக்கும் சந்தோஷமாக உள்ளது. யாகசாலைகளை நான்கு தலைமுறைகளாக இந்த பணியை தேவகோட்டையை சேர்ந்த சிற்பகலாமணி ஸ்தபதி குரு. பஞ்சநாதன் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

எங்களுடன் அரட்டை அடிக்கவும்